×

நாமகிரிப்பேட்டையில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்-மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை

நாமகிரிப்பேட்டை :  நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளான சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, கார்கூடல்பட்டி, பிலிப்பாக்குட்டை, முள்ளுக்குறிச்சி, உரம்பு, மங்களபுரம், ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நிலக்கடலை சகுபடி செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்  நிலக்கடலை விதைப்பு போட்டனர். கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் நிலக்கடலை செடிகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காய்ந்த நிலக்கடலை கிலோ ₹80க்கு விற்கப்படுகிறது.அதை வாங்கி உடைத்து, நிலத்தில் ஏர் ஓட்டி விதைப்பு செய்கிறோம். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 46 கிலோ தேவைப்படுகிறது. மேலும் வயல்களில் களை எடுத்தல், உரம், நீர் பாய்சுதல் போன்ற பணிகள் செய்தால் ஏக்கருக்கு ₹15ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால், செடிகள் நன்கு வளர்ந்து காய் பிடிக்க தொடங்கியது. ஆனால் தற்போது பச்சை நிலக்கடலை, 46 கிலோ கொண்ட ஒரு முட்டை ₹1500 முதல் ₹1700 வரை மட்டுமே விலை போகிறது. மேலும் ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைகள் முதல் 18 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதே அரிதாக உள்ளது. மேலும் சில்லறை வியாபாரிகள், கிலோ ஒன்றுக்கு ₹15 முதல் ₹20க்கு என குறைவான விலைக்கு வாங்கி செல்லுவதால், பெரும் நஷ்டம் எற்படுகிறது. இவ்வாறு கூறினர்….

The post நாமகிரிப்பேட்டையில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்-மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Seerapalli ,R. Budhupatti ,Karkudalpatti ,Philippakkuttay ,Mullukurichi ,Urambu ,Mangalapuram ,Oilpatti ,
× RELATED ₹60 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்