×

வாழ்வில் வீந்தோரை வாழ வைக்கும் வாழை

தில்லைநகர் : திருச்சி அடுத்த ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்டது உத்தமர்சீலி கிராமம். திருவானைக்காவலில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தை சுற்றி இரண்டு பக்கமும் ஒன்று காவிரி மற்றொன்று கொள்ளிடம் ஆற்றுக்கு இடையில் தீவு கிராமமாக உள்ளது. மிகவும் பசுமை நிறைந்த இக்கிராமத்தில் விவசாயம் அமோகமாக நடக்கிறது. நெல், உளுந்து, பருத்தி, வாழை, செங்கரும்பு அதிகம் பயிரிடுகின்றனர். இப்பகுதி விவசாய நிலம் எப்போதும் தரிசாக இருந்தது கிடையாது. ஏதாவது ஒரு சாகுபடி பயிர்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள். இப்பகுதியில் நேந்திரன் வாழை ரகத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நேந்திரன் வாழை ரகம் ஒரு போகத்துடன் அறுவடை செய்து, அதை அழித்து விட்டு நெல், அல்லது பருத்தி சாகுபடி செய்கின்றனர். தற்போது எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென விவசாயம் நிறைந்து காணப்படுகிறது. அதிக நீர் பாசனம் நிறைந்த பகுதி என்பதால் 30 அடி போர்வெல் போட்டாலே கட்டுக்கடங்காத தண்ணீர் பீரிட்டு எழும்பும். இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியோடு விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்பகுதியில் அதிகம் பயிரிடப்படும் நேந்திரன் வாழை ரகம் பயிரிட்ட பத்தாவது மாதத்தில் அறுவடைக்கு வருகிறது. தற்போது இப்பகுதியில் பாதியளவு வளர்ந்து வாழை கன்றுகளுக்கு புடைகன்றுகள் எடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மேலும், வாழைத்தோட்டத்தில் தண்ணீர் தேங்காத வகையில் கிடங்கு பறிக்கும் பணியும், வாழைக்கன்றுகளுக்கு மண் அணைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பங்குனி மாதத்திற்கு முன் வாழைத்தார் அறுவடைக்கு வந்துவிடும். “வாழை ஒருவரை நினைத்தால் வாழை வவைக்கும், அல்லது சித்திரை காற்றுக்கு சரிவுக்கு கொண்டு சென்றுவிடும்’’. இதனால் சித்திரை மாதத்திற்கு முன் வாழைத்தாரை அறுவடை செய்ய விவசாயிகள் கவனுத்துடன் பராமரித்து வருகின்றனர்.இந்த நேந்திரன் பழத்துக்கு தமிழ்நாட்டை விட கேரளாவில் அதிக மவுசு. ஆதலால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரள மக்கள் சிற்றுண்டிக்கும் மற்றும் புட்டு வகை செய்யவும், சிப்ஸ் மற்றும் போண்டா பஜ்ஜி அனைத்திற்குமே நேந்திரன் உபயோகப்படுத்துகின்றனர். வாழைப்பழம் தோல்உரித்தால் வெள்ளையாக இருக்கும், ஆனால் இந்த நேந்திரன் பழமானது உரித்தால் மஞ்சள் தங்க முலாம் பூசியது போல் தகதகவென பவுன் கலரில் இருக்கும். கடந்த கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் இந்த நேந்திரன் வாழை பழம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ்-க்கு எதிர்ப்பு சக்தி அதிகளவில் இப்பழத்தில் உள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது இதனால் தமிழ்நாட்டின் அரசு செய்தி குறிப்பிலே நேந்திரன் பலத்தை கொரோனா பாதிக்கப்பட்டோர் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.நேந்திர பழத்தில் வீரிய சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகளவில் உள்ளதால் நம் குழந்தைகளுக்கு தாராளமாக இதனை கொடுத்து சாப்பிட சொல்லலாம். இதனை சாப்பிட்டு அனைவரும் பயனடைய வேண்டும் என்று வாழையை பயிரிட்ட அனைத்து விவசாயிகள் தகவல்களை தெரிவிக்கின்றனர்….

The post வாழ்வில் வீந்தோரை வாழ வைக்கும் வாழை appeared first on Dinakaran.

Tags : Thillainagar ,Srirangam Constituency Uttamarseeli village ,Thiruvanaikaval ,Kallani ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி