×

தினமும் 100 டன்… 40 டன் கேரளா ஏற்றுமதி: விளைச்சலை தரும் ஒடுகத்தூர் கொய்யா

வேலூர் ஒடுகத்தூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். அதேபோல்,  அதில் விவசாயத்தில் முக்கியமாக  ஒடுகத்தூரில் வாழை, கொய்யா, கேந்தி, ரோஜா மலர்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. இவற்றில் அப்பகுதி விவசாயிகளுக்கு கைகொடுக்கும் தோழனாக கொய்யா உள்ளது.  ஒடுகத்தூர் கொய்யாவிற்கென்று தனி மவுசு உண்டு.சுற்றுவட்டார கிராமங்களில் கொய்யா அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ருசிமிகுந்த இந்த கொய்யா உள்ளூரிலும்  ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, மாநிலம் கடந்தும் நல்ல வறவேற்பு உள்ளது.“ஒடுகத்தூரை அடுத்த கொட்டாவூரில்  35 வருஷமா கொய்யா சாகுபடி செய்து வரேன். சுமார் 2 ஏக்கரில் விளைவிச்சு கொய்யாவை காட்டுக்கே வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கிக்கொள்கின்றனர். ஆண்டு தோறும் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மழைகாலத்தில் மட்டும் நிலத்தில் மழைநீர் தேங்கி சேதமாகும். நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 டன் வரை கொய்யா ஏற்றுமதி செய்துள்ளேன்.இதனை வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 ரூபாய்க்கு மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். பின்னர், கொய்யாவை தரம் பிரித்து பழச்சாறுக்கு மற்றும் விற்பனைக்கு என்று தனி தனியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில், கேரள மாநிலத்திற்கு மட்டுமே ஒரு நாளைக்கு 35 முதல் 40 டன் வரைபழச்சாறுக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்கின்றது. ஒடுகத்தூர் பகுதியில் பதப்படுத்தும் கொய்யா பழச்சாறு தொழிற்சாலை அமைந்தால் ஆண்டு முழுவதும் விவசாயிகளும் அதிக லாபம் ஈட்ட முடியும்.  மழைக்காலங்களில் அதிக விளைச்சல் இருந்தாலும், வியாபாரிகள் குறைந்த விலை கொடுத்தே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல்  செய்கின்றனர். பூச்சி தாக்குதல், பூஞ்சை நோய்கள் போன்றவற்றாலும் கொய்யா  சாகுபடி பாதிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பதப்படுத்தும் கொய்யா  கிடங்கு அமைத்தால் பெரும் உதவியாக இருக்கும். ஆண்டு முழுவதும் எந்த பாதிப்பும் இல்லாமல் கொய்யா அறுவடை  செய்து பதப்படுத்தி வைக்கலாம்’’ என்கின்றார் கொட்டாவூர் கிராம விவசாயி ரங்கநாதன். தொடர்புக்கு: ரங்கநாதன் – 94897 53233.தொகுப்பு: சுரேந்தர்

The post தினமும் 100 டன்… 40 டன் கேரளா ஏற்றுமதி: விளைச்சலை தரும் ஒடுகத்தூர் கொய்யா appeared first on Dinakaran.

Tags : Kerala ,Vellore Odukattur ,Odukathur ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...