×

பலன் தரும் ஸ்லோகம் (இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்க)

அரண்யே ரணே தாருணே சத்ருமத்யே
அனலே ஸாகரே ப்ராந்தரே ராஜகே
ஹேத்வமேகா கதிர்தேவி
நிஸ்தாரநௌகாநமஸ்தே
ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே  
 
சித்தேஸ்வரி தந்த்ரத்திலுள்ள துர்க்கை துதி

பொதுப்பொருள்: சுற்றிலும் சூழ நிற்கும் ஆபத்துக்களிலிருந்து எம்மைக் காக்கும் துர்க்கை அன்னையே உனக்கு நமஸ்காரம். இயற்கைச் சீற்றங்களாகட்டும், காட்டிலே தனித்துச் செல்லும் பயணங்களாகட்டும், யுத்தத்தில் ஆகட்டும். பயங்கரமான பகைவர்கள் சூழ்ந்தபோதிலாகட்டும், எரிக்கும் அக்கினியிலாகட்டும், ஆழ்கடலிலாகட்டும், எங்கும் எமைக் காத்தருளும் அன்னையே உனக்கு நமஸ் காரம். எந்தவகை ஆபத்திலிருந்தும் காக்கும் தேவியே, எம்மை வாழ்க்கை சாகரத்திலிருந்தும் காக்கும் ஓடமாக விளங்கும் அன்னையே உனக்கு நமஸ்காரம். (செவ்வாய்க்கிழமைகளில் இத்துதியைக்கூறி துர்க்காம்பிகையை வழிபட இயற்கைச் சீற்றங்களாலும் எல்லாவகைப் பகைவர்களாலும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் நீங்கும். மங்கலங்கள் சூழும்.)

Tags : natural disasters ,
× RELATED 2 மனு கொடுத்தும் ஒன்றிய அரசு வெள்ள...