×

மாஜி அதிபர் கோத்தபய மீது அரசு நிதி முறைகேடு வழக்கு: முக்கிய எதிர்க்கட்சி கோரிக்கை

கொழும்பு: இலங்கையின் அதிபராக இருந்தவர் கோத்தபய ராஜபக்சே. பொருளாதார பிரச்னையால் அதிபர் பதவி விலக வேண்டும் என  மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த மாதம் பதவியில் இருந்து விலகிய கோத்தபய இலங்கையில் இருந்து வெளியேறி மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். அங்கிருந்து  அவர் தாய்லாந்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சி நிர்வாகி அஜித் பெரைரா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோத்தபய ராஜபக்சே இந்த நாட்டின் குடிமகன், அவர் தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான உரிமை உள்ளது.  எனினும், அவர் அரசு நிதியை  தவறாக பயன்படுத்தியதற்காக அவர் மீது வழக்கு பதிய வேண்டும்.இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் முன்னாள் அதிபர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஊழியர்களைக் கொண்ட அலுவலகம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அனுமதிக்கிறது.“தனது பெற்றோரின் நினைவுச் சின்னத்திற்கு அரசு நிதியை செலவிட்டதாக அவர் மீது ஒரு வழக்கு உள்ளது. அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் விசாரணை மற்றும் தண்டனையை சந்திக்க நேரிடும்” என்றார்….

The post மாஜி அதிபர் கோத்தபய மீது அரசு நிதி முறைகேடு வழக்கு: முக்கிய எதிர்க்கட்சி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : president ,Gotabaya ,Colombo ,Rajapaksa ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்