×

அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் மகளை வீசி கொன்று தற்கொலை செய்த தாய்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய மற்றொரு மகள்

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தீபக் (38). பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் இருந்தே வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (32). முதல் மகள் மதுநிஷா (12) அரசூரில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பும், 2வது மகள் தருணிகா (6) ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இரவும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்படவே, மனமுடைந்த விஜயலட்சுமி, ‘‘வாழப்பிடிக்கவில்லை. மகள்களை விட்டு செல்ல விருப்பம் இல்லை, மன்னிச்சுடுங்க’’ என்று காரப்பாடியில் உள்ள அண்ணன் ராமசாமிக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு, மகள்களுடன் ஸ்கூட்டரில் குருமந்தூர் அருகே சுட்டிகல் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். மகள்களை வாய்க்காலில் வீசி விட்டு தானும் குதித்துவிட்டார். நள்ளிரவில் எழுந்த தீபக் மனைவி, குழந்தைகளை காணாமல் தேடினார். உறவினர்களிடம் விசாரித்ததில் விஜயலட்சுமி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியது தெரிய வந்தது. அங்குமிங்கும் தேடியபோது, சுட்டிக்கல் மேட்டில் ஸ்கூட்டர் நிற்பது தெரிய வந்தது. உறவினர்கள் வாய்க்காலில் 3 பேரையும் தேடினர். அப்போது சுமார் 3 கி.மீ தொலைவில் ஆயிபாளையம் என்ற இடத்தில் மரத்தை பிடித்துக்கொண்டு மதுநிஷா அழுது கொண்டிருந்ததை பார்த்து அவரை மீட்டனர். தகவலின் பேரில் கடத்தூர் போலீசார், நம்பியூர் தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 20 கி.மீ தொலைவில் வேட்டக்காரன் கோயில் என்ற இடத்தில் விஜயலட்சுமி உடலை மீட்டனர். தருணிகா உடலை தேடி வருகின்றனர்….

The post அண்ணனுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு கீழ்பவானி வாய்க்காலில் மகளை வீசி கொன்று தற்கொலை செய்த தாய்: மரத்தை பிடித்து உயிர் தப்பிய மற்றொரு மகள் appeared first on Dinakaran.

Tags : Gopi ,Deepak ,Karatupalayam ,Erode district ,Bangalore.… ,
× RELATED பெண் ஆய்வாளரை தவறாக பேசிய தலைமைக் காவலர் சஸ்பெண்ட்!!