×

ராஜஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானீருக்கு வடகிழக்கே அதிகாலை 2.01 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பிகானீரில் இருந்து 236 கிலோ மீட்டர் தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்ககம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ள நிலையில், யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இது குறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட பதிவில்,  22-08-2022 அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானது. 02:01:49 IST, லேட்: 29.38 மற்றும் நீளம்: 71.45, ஆழம்: 10 கிமீ, இடம்: பிகானேர், ராஜஸ்தான் 236 கிமீ NW,’ என  குறிப்பிட்டுள்ளது.  இதற்கு முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் அதிகாலை 1.12 மணியளவில் பூமிக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், வெள்ளியன்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 43 கிமீ கிமீ தூரத்தில் பித்தோராகர் பகுதியில் லேசான நடுக்கம் உணரப்பட்டது. இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில், மதியம் 12.55 மணிக்கு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவித்தது. மேலும் அன்றையதினமே, ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்-தென்மேற்கில் 92 கிமீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 3.1 ஆக பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது….

The post ராஜஸ்தானில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,northeast ,Bikaner ,Dinakaran ,
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...