சென்னை: சிருஷ்டி டாங்கே 2010ம் ஆண்டு வெளியான ‘காதலாகி’ படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், தெலுங்கில் படங்கள் நடித்து வந்தார். மேலும், பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார். தற்போது, இவருக்கு நிகழ்ச்சியில் ஒன்றில் அவமரியாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முறையாக டான்ஸ் கான்செர்ட் முறையில் பிரபுதேவாவை வைத்து நிகழ்ச்சி நடத்த உள்ளனர். பிப்ரவரி 22ம் தேதி ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் சிருஷ்டி டாங்கே நடனம் ஆடுவதாக இருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனக்கு மரியாதை அளிக்கவில்லை, நிகழ்ச்சியில் உரிய திட்டமிடல் இல்லையென கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் சிருஷ்டி. இதற்கும் பிரபுதேவாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார் சிருஷ்டி டாங்கே.