×

ராஷ்மிகா படத்துக்கு வரி விலக்கு

மும்பை: பாலிவுட்டில் கடந்த வாரம் விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த சாவா என்கிற திரைப்படம் வெளியானது. சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜி மன்னனின் வாழ்க்கை வரலாறை தழுவி வரலாற்று படமாக இது உருவாகி இருந்தது. சாம்பாஜி மன்னனாக விக்கி கவுசலும் அவரது மனைவி ஏசுபாயாக ராஷ்மிகாவும் நடித்திருந்தனர். லக்ஷ்மன் உடேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். தற்போது சத்ரபதி சிவாஜியின் 395வது வருட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் சத்ரபதி சிவாஜியின் மகனான சாம்பாஜியின் வரலாற்றை பற்றி, அவர் இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள் பற்றி உருவாகி இருக்கும் சாவா திரைப்படத்திற்கு வரி விளக்கு அளிப்பதாக மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார் இதனால் படக்குழுவினர் உற்சாகமரிந்துள்ளனர்.

Tags : Rashmika ,Mumbai ,Bollywood ,Vicky Kaushal ,Rashmika Mandanna ,King Sambhaji ,Chhatrapati Shivaji ,Vicky ,King Sambhaji… ,
× RELATED ஓமன் நாட்டில் ராஷ்மிகா பர்த்டே கொண்டாடிய விஜய் தேவரகொண்டா