×

கீப்பிங் செய்து வெற்றிக்கு பங்களிப்பதை மிகவும் ரசித்தேன்: ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் பேட்டி

ஹராரே: இந்தியா-ஜிம்பாப்வே இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2வது போட்டி நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 161 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் களம் இறங்கிய இந்தியா 25.4ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றி மூலம் 2-1 என தொடரையும் கைப்பற்றியது. 39 பந்தில் 43 ரன் அடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் கூறியதாவது: “ஜிம்பாப்வே அணியில் சில திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சில பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர். நான் பொறுமையாக இருந்து விளையாட வேண்டும் என நினைத்திருந்தேன், ஆனால் அது இந்த போட்டியில் நடக்கவில்லை. மிடில் ஆர்டர் வீரர்கள் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் இங்கு சிறப்பான கிரிக்கெட் விளையாடி, வெற்றி பெறுவதற்காகவே வந்துள்ளோம். இந்த தொடரை கைப்பற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. கடைசி போட்டியிலும் வெற்றி பெறுவதற்காக போராடுவோம். எங்கு சென்றாலும் அங்கு அதிகமான ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவாக வருகின்றனர், அவர்களின் ஆதரவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். ஜிம்பாப்வே கேப்டன் ரெஜிஸ் சாகப்வா: களத்தில் நாங்கள் நன்றாக போராடினோம். கடந்த சில ஆட்டங்களில் ஆரம்ப விக்கெட்டுகளை எடுக்க சிரமப்பட்டோம், இன்று அதை செய்தோம் என்றார். ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் கூறுகையில், நான் 3 கேட்ச்களை எடுத்தேன். ஆனால் ஒரு ஸ்டம்பிங்கையும் தவறவிட்டேன். கீப்பிங் செய்து வெற்றிக்கு பங்களிப்பதை மிகவும் ரசித்தேன். இந்தப் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசினர், நான் கீப்பிங்கை மிகவும் ரசித்தேன், என்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது….

The post கீப்பிங் செய்து வெற்றிக்கு பங்களிப்பதை மிகவும் ரசித்தேன்: ஆட்டநாயகன் சஞ்சு சாம்சன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sanju Samson ,Harare ,India ,Zimbabwe ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...