×

வேடன் வயல் பகுதியில் ஆற்று பாலத்தை புனரைமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

கூடலூர்:  கூடலூர் நகராட்சி 1வது வார்டு பகுதியில் உள்ளது வேடன் வயல். 2வது மைல் பகுதியில் இருந்து வேடன் வயல் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து ஆனைசெத்த கொல்லி பகுதி வரை செல்லும் கிளைச்சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ஓடும் பாண்டி ஆற்றின் பிரதான கிளை ஆற்றின் மீது கடந்த 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலம் தற்போது ஆற்றின் அகலத்தை விட குறுகியுள்ளது. தொடர் மழைக்காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு ஆற்றின் அகலம் அதிகரித்து உள்ளது. மேலும் மழை வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லும் நிலையில் உள்ளது. மேலும் குறுகிய பாலம் என்பதால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கி அருகில் உள்ள விவசாய நிலங்கள் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிடுகிறது.  இந்த பகுதியில் வசிக்கும் சிறு தேயிலை விவசாயிகள் இங்கு உள்ள கூட்டுறவு தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை எடுத்து வரும் விவசாயிகளுக்கு இந்த சாலையை அதிகளவில் பயன்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த தொடர் மழையில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தின் இருபுறமும் உள்ள பாதுகாப்பு சுவர்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் ஆற்றில் வரும் மழைநீர் வேகமாக செல்லும் வகையில் பாலத்தின் நீளத்தை அதிகரித்து புதிதாக தரமான பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post வேடன் வயல் பகுதியில் ஆற்று பாலத்தை புனரைமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vedan Vyal ,Kudalur ,Kudalur Municipality ,Vedan field ,Vedan ,Dinakaran ,
× RELATED புலி நடமாட்ட தகவலால் தடை...