×

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்

ஒடிஸா மாநிலம், புவனேஷ்வர், ஹிராபூர்

அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியாம் ஸ்ரீ லலிதாம்பிகைக்கு சதுஷ்சஷ்டி கோடி யோகினி ஸேவிதாயை நமஹ என்று வஸின்யாதி வாக்தேவதைகளால் இயற்றப்பட்ட லலிதா ஸஹஸ்ரநாமத்தில் ஒரு திருநாமம் உள்ளது. அதாவது 64 யோகினிகள் எட்டு எட்டு பேர்களாக பெருகி 64 கோடி யோகினிகளாக தேவிக்கு நகரத்தில் சேவை புரிந்து கொண்டு வருவதாக லலிதோபாக்யானமும் கூறுகின்றது. அந்த மூல யோகினிகள் 64 பேருக்கும் ஒடிஸா மாநிலத்திலுள்ள புவனேஷ்வருக்கு அருகேயுள்ள ஹிராபூர் எனும் ஊரில் சதுஷ்சஷ்டி யோகினி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டில் காளாசூரி மன்னர்களால் கட்டப்பட்டது. இக்கோயிலின் வடிவமைப்பை பார்த்தால் டெல்லியிலுள்ள நாடாளுமன்ற கட்டிடம்போலவே இருப்பது ஆச்சரியத்தை தருகின்றது. வட்டவடிவத்திலுள்ள ஆலயத்தில் வரிசையாக 64 யோகினிகளுக்கும் தனித்தனியாக சந்நதி அமைந்துள்ளன.

இக்கோயில் மிகமிகப் பழமையானதால் சில யோகினிகளின் சிலைகள் சிதைந்துள்ளன. இந்த 64 யோகினிகளில் முதல் எட்டு யோகினியரை சித்திர வடிவில் ஆன்மிகம் பலன் இதழில் தருவதில் பெருமை கொள்கிறோம். ஏனெனில், இங்குள்ள ஓவியங்கள் அனைத்துமே தியான சித்திரங்கள் ஆகும். இவற்றை தனியே எடுத்து வைத்துக்கொண்டு வீட்டில் வழிபடலாம். மேலும், இந்த யோகினியருக்குரிய பீஜ மந்திரங்களையும் சேர்த்துத் தருகின்றோம். எனவே, தியான ஓவியங்களை நெஞ்சில் நிறுத்தி மந்திரங்களை சொல்லி வழிபட யோகினிகள் யோக வாழ்வை அருள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு: ந. பரணிகுமார்

Tags : yoginis ,
× RELATED அறிவைப் பெருக்கி நினைவாற்றல் கூட்டும் அஜவதனா