×

வீடுகளின் முன்பு நிறுத்திய 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமிகளுக்கு வலை

அம்பத்தூர்: அம்பத்தூர் இந்தியன் வங்கி காலனி மாயா தெருவில் பலர் தங்களின் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை வீடுகளின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள், இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் உடைத்து சென்றுள்ளனர். காலையில் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதன் உரிமையாளர்கள் இதுபற்றி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் போதையில் கார் கண்ணாடிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை உடைத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்….

The post வீடுகளின் முன்பு நிறுத்திய 10க்கும் மேற்பட்ட கார் கண்ணாடி உடைப்பு: போதை ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Ambathur ,Indian Bank Colony Maya Street ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...