×

பொன்னேரியில் 2,278 பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி

பொன்னேரி: பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 2278 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை நகரமன்றத் தலைவர் பரிமளம் விஸ்வநாதன் வழங்கினார். பொன்னேரி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பொன்னேரி, மணலி புதுநகர், ஞாயிறு, பெரும்பேடு, காட்டூர், திருவெள்ளைவாயல், ஆரணி, பழவேற்காடு, மெதூர், மீஞ்சூர் பகுதிகளில் 13 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இப்பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 2,278 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முன்தினம் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், பொன்னேரி நகரமன்றத் தலைவர் டாக்டர் பரிமளம்விஸ்வநாதன் பங்கேற்று மிதிவண்டிகளை  மாணவ-மாணவிகளுக்கு  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மோகனா, அந்தந்த பள்ளிகளின் தலைமையாசியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post பொன்னேரியில் 2,278 பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி appeared first on Dinakaran.

Tags : Bonneri ,Bonneri Education District ,
× RELATED மீஞ்சூரில் வீட்டு வாசலில்...