×

தமிழகத்தில் ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி நடவடிக்கை: சென்னை ஐகோர்ட் பாராட்டு

சென்னை: காவல் துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை செயலாளரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, காவல்துறை பணியை இந்த நீதிமன்றம் குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு சில அதிகாரிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன், ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதி, ஒரு காவல் உயர் அதிகாரி வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டால் மாதம் ஒன்றுக்கு அவர்களின் சம்பளமாக இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுகிறது. காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என்று அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளதாக டிஜிபி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பாராட்டுக்குரியது என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்….

The post தமிழகத்தில் ஆர்டர்லி முறையை ஒழிக்க டிஜிபி நடவடிக்கை: சென்னை ஐகோர்ட் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : DGP ,Tamil Nadu ,Chennai ,ICourt ,U. Manikavel ,
× RELATED கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம்...