×

பொதட்டூர் பேட்டை பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு: மன்ற கூட்டத்தில் ஒப்புதல்

பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.84 லட்சம் ஒதுக்கீடு செய்து மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம்  பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற  சாதாரண கூட்டம்  பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.இரவிச்சந்திரன்( அதிமுக) தலைமையில் நேற்று நடைபெற்றது. செயல் அலுவலர் பிரகாஷ் வரவேற்றார். இக் கூட்டத்தில்  பேரூராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். வரவு செல்வு கணக்கு விவரங்கள் புதிய திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து விவாதம் நடைபெற்றது.  குறிப்பாக  மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பேரூராட்சி முழுவதும்  சுகாதாரம், தூய்மை பணிகள் மேற்கொள்வது,  குப்பை கழிவுகள் அகற்றுதல்  டெங்கு உள்ளிட்ட நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அத்தியாவசியப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைந்து  பணிகள் தொடங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதனை அடுத்து வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு  செய்து மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதிமுக, திமுக கவுன்சிலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் குப்பன், வரித்தண்டலர்  ஜெயசங்கர், கணினி இயக்குபவர்  தணிகாச்சலம் பங்கேற்றனர்….

The post பொதட்டூர் பேட்டை பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ரூ.84 லட்சம் ஒதுக்கீடு: மன்ற கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Potattur Pett Municipality ,Pallipat ,Pothatturpet ,Tiruvallur District ,Potattur Petta Municipality Development ,Dinakaran ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை