×

நடிப்பா இயக்கமா? பிரதீப் ரங்கநாதன் பதில்

சென்னை: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள படம், ‘டிராகன்’. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிகுமார், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். வரும் 21-ம் தேதி வெளியாகிறது.

இதன் புரமோஷன் நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் கூறும்போது, ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு என்ன மாதிரியான கதையைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அப்போதுதான் ‘டிராகன்’ வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் 2-வது முறையாக இணைந்துள்ளேன்.

‘ஓ மை கடவுளே’ எனும் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவர் என் 10 ஆண்டுகால நண்பர். இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துதான் பழகுகிறோம். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இப்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, நடிப்பா, இயக்கமா? என்பதை முடிவு செய்வேன்’’ என்றார்.

Tags : Pradeep Ranganathan ,Chennai ,Aswath Marimuthu ,Anupama Parameswaran ,Kayadu Lohar ,K.S. Ravikumar ,Gautham Vasudev Menon ,Mysskin ,Kalpathi S. Agoram ,AGS Entertainment ,
× RELATED பிரதீப் ரங்கநாதன் ஜோடியாகிறார் மமிதா பைஜு