×

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை அரும்பாக்கம்வங்கி கொள்ளை வழக்கில் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு உள்ளதை அடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீட்டில் வைத்திருந்தது  தெரியவந்ததை அடுத்தது அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார். மறுபக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய நபர்களை தனிப்படை போலீசார் அடுத்தடுத்து கைது செய்துவருகின்றர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தத்திய போது கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை எங்கே என கேட்டனர். அப்போது, அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் அந்த தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. வங்கி கொள்ளையில் கைது செய்யப்பட்ட கொள்ளையன் சந்தோஷ் என்பவரின் மனைவியும், காவல் ஆய்வாளர் அமல்ராஜின் மனைவியும் சகோதரிக்கு என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனை பயன்படுத்தி கொள்ளையடித்த தங்கத்தை அவர் வீட்டில் மறைத்து வைத்ததாக தெரிய வந்ததை அடுத்து அந்த தங்கத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனிப்படை போலீசார், காஞ்சிபுர சரக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்டையில், காஞ்சிபுரம் டிஐஜி சத்தியபிரியா, அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளரான அமல்ராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தொடர்ந்து காவல் ஆய்வாளர் அமராஜிடமும், அவரது மனைவிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. …

The post சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Acharapakkam ,Chennai Arumbakkam ,CHENNAI ,Acharappakkam ,Arumbakkam ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!