×

வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட டிவிட்டர் பதிவு:சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. வார்டு கமிட்டி தலைவராக அந்தந்த வட்டங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள்தான் இருப்பார்கள். அவர்களுக்கே இதுகுறித்த விவரங்களும், அதிகார வரம்புகளும் தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகளை அவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்ற வினா எழுகிறது. சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதேநிலைதான் காணப்படுகிறது. இந்த அமைப்புகள் தமிழகத்தில் இப்போதுதான் முதன்முறையாக கொண்டு வரப்படுகின்றன என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புரிதல் இல்லாமல் இருக்கலாம். கிராம சபைகளுக்கு இணையான, சில விஷயங்களில் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவை தான் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபைகள். உள்ளாட்சியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் இந்த அமைப்புகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்….

The post வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Parliament ,Ward Committee, Area Councils ,Anbumani ,Chennai ,B.M.K. ,Twitter ,Chennai Corporation ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...