×

இன்று முதல் அமல் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு

அகமதாபாத்: அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் பால் சார்ந்த உணவுப் பொருட்கள் உற்பத்தியில் அமுல் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், அமுல் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு, அமுல் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், ‘பால் விலையில் 4 சதவீதம், அதாவது லிட்டருக்கு ரூ.2 அதிகரிக்கப்படுகிறது. இந்த விலை ஏற்றம்  ஆகஸ்ட் 17ம் (இன்று) தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இதன்படி, அமுல் கோல்டு 500 மிலி ரூ.31, அமுல் தாசா 500 மிலி ரூ.25, அமுல் சக்தி 500 மிலி ரூ.28க்கும் விற்பனையாகும். குஜராத்தில் உள்ள அகமதாபாத், சவுராஷ்டிரா மண்டலங்கள், டெல்லி என்சிஆர், மேற்கு வங்கம், மும்பை மற்றும் அமுல் விற்பனையாகும் அனைத்து பகுதிகளிலும் இதே விலை உயர்வு அமல்படுத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. பால் பொருள் உற்பத்திக்கான ஒட்டு மொத்த இயக்கச் செலவு, கால்நடை தீவன செலவு 20 சதவீதம் அதிகரித்ததால், விலை உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது….

The post இன்று முதல் அமல் அமுல் பால் விலை லிட்டர் ரூ.2 உயர்வு appeared first on Dinakaran.

Tags : Amal Amul ,Ahmedabad ,Amul ,India ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் கார் மீது லாரி மோதி 10 பேர் பலி