சென்னை: நடிகர் தனுஷ், ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்ைத இயக்கி முடித்துள்ளார். வரும் 21ம் தேதி திரைக்கு வரும் இதில், தனுஷ் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மற்றும் அனிகா சுரேந்திரன், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கராஜன், ராபியா, பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
ஒரு பாடல் காட்சியில் பிரியங்கா அருள் மோகன், ஜி.வி.பிரகாஷ் குமார் ஆடியுள்ளனர். படம் குறித்து பவிஷ் கூறியதாவது: எந்த அடையாளமும், சிபாரிசும் இல்லாமல் திரையுலகில் சாதிக்க நினைத்துள்ளேன். முன்னதாக தனுஷ் இயக்கிய படங்களிலும், செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’, வெங்கி அட்லூரி இயக்கிய ‘வாத்தி’ ஆகிய படங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். நடிப்பு என்பது எனக்கு புதிது.
டைரக்டர் தனுஷ் சொல்லிக் கொடுத்ததைப் புரிந்துகொண்டு நடித்தேன். ஷூட்டிங்கில் சீரியசாக இருக்கும் தனுஷ், காட்சி முடிந்தது செம ஜாலியாகி விடுவார். புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார். யாரையும் திட்ட மாட்டார், அடிக்க மாட்டார். எனது ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். காதல் காட்சிகளில் நடிக்க பயமாக இருந்தது. இது 2கே கிட்ஸ் பற்றிய கதை என்றாலும், நட்பின் வலிமையைப் பற்றியும் படம் பேசியிருக்கிறது.