×

தாம்பரம் மாநகராட்சியில் மேயர் தேசிய கொடி ஏற்றினார்

தாம்பரம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் இருந்தனர். அதேபோல பெருங்களத்தூர் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் டி.காமராஜ் தேசியக்கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். உடன் நியமன குழு உறுப்பினர் பெருங்களத்தூர் சேகர், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் இருந்தனர். பல்லாவரம் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, கிழக்கு தாம்பரம் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் எஸ்.இந்திரன், பம்மல் மண்டல அலுவலகத்தில் மண்டல தலைவர் வே.கருணாநிதி ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்….

The post தாம்பரம் மாநகராட்சியில் மேயர் தேசிய கொடி ஏற்றினார் appeared first on Dinakaran.

Tags : Mayor ,Tambaram Corporation ,Tambaram ,Vasantakumari Kamalakannan ,Independence Day ,Dinakaran ,
× RELATED கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வரைபட திட்ட ஆய்வாளர் கைது