×

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!

பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவையில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை இன்று பதவியேற்றது. ஆட்சி கவிழ்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டதோடு பாரதிய ஜனதாவையும் ஓரம்கட்டிய நிதிஷ் குமார், தற்போது ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு மீண்டும் முதலமைச்சராகியுள்ளார். முதலமைச்சராக நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத்தின் மகனான தேஜஸ்வி பிரசாத்தும் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதன்படி, நிதிஷ்குமார் அமைச்சரவையில் தேஜஸ்வியின் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த 16 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஏற்கனவே துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்ற நிலையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பீகாரில் 36 பேர் வரை அமைச்சர்களாக நியமிக்கப்பட அனுமதி உண்டு. காலியாக இருக்கும் அமைச்சர் பதவிக்கான இடங்கள் இன்னும் சில நாட்களில் நிரப்பப்பட உள்ளன. முதலமைச்சர், துணை முதல்வர் சேர்த்து 33 பேர் பதவியில் இருப்பார்கள்….

The post பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nidishkumar ,Patna ,Nitishkumar ,Governor ,Baku Sawukan ,State Cabinet ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...