×

கடலில் மூழ்கி பெண் பலி; 2 சிறுவர்கள் உயிர் தப்பினர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே நேற்று காலை நடைபெற்ற திருமணத்திற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்த  ஏராளமானோர் வந்தனர். திருமணம் முடிந்ததும்  உறவினர்கள் சிலர் மதியம்  எண்ணூர் கடற்கரைக்கு வந்தனர். பின்னர் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும்  கடலில் இறங்கி குளித்தனர். அப்போது   சகினாபி (48) என்ற பெண், மற்றும் 2 சிறுவர்கள்  ராட்சத அலையில் சிக்கினர்.இதை பார்த்த உறவினர்கள் மீனவர்கள் உதவியுடன்  சகினாபி மற்றும் 2 சிறுவர்களையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது சகினாபி இறந்தது தெரிந்தது. சிறுவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்….

The post கடலில் மூழ்கி பெண் பலி; 2 சிறுவர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Tags : Thiruvottriyur ,Cuddalore ,Thiruvottur Periyar Nagar ,
× RELATED குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது