சென்னை: அமமுகவில் உள்ள தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. பொதுக்குழு கூட்டத்தில், அமமுகவுக்கு தலைவரை தேர்ந்தெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி அமமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரறிவாளனை போல மீதமுள்ள 6 தமிழர்களையும் விடுவிக்க கோரிக்கை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமமுகவில் சசிகலாவுக்காக தலைவர் பதவி காலியாக வைத்திருப்பதாக டிடிவி தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், சசிகலாவுக்கு என கூறப்பட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவித்திருப்பதால் சசிகலா ஆதரவாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. அமமுகவில் சசிகலா மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சமிஞைகள் கட்சி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது. அடுத்த ஆண்டு நடைபெறக்கூடிய இந்த தேர்தலில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது….
The post அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!! appeared first on Dinakaran.
