சென்னை: கடந்த 2012 பிப்ரவரி 3ம் தேதி பாண்டிராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த ‘மெரினா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார், சிவகார்த்திகேயன். அவர் நடிகராகி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைந்தது. இந்நிலையில், தனது தந்தையுடன் பள்ளிக்குச் சென்று நுழைவுத் தேர்வு எழுதியது குறித்து அவர் கண்கலங்கி பேசியிருக்கிறார். அது வருமாறு: நான் படித்த திருச்சி தனியார் பள்ளிக்கு சீஃப் கெஸ்ட் ஆக சென்றேன். இப்பள்ளியில் 8வது என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுத என் தந்தையுடன் வந்துள்ளேன். இங்கு சீட் கிடைப்பது மிகவும் கஷ்டம். எனக்கு கணக்கு சரியாக வராது. சுமாராகவே அந்த என்ட்ரன்ஸ் எக்ஸாமை எழுதினேன்.
அப்போது அப்பா என்னிடம், ‘நான் யாரிடமும் ரெக்வெஸ்ட் செய்து எதையும் கேட்டது இல்லை. உனக்காக ஒரு மணி நேரம் ஸ்கூலில் நின்று சீட்டு வாங்கினேன். தயவுசெய்து நன்றாகப் படி’ என்றார். அப்போது நான், ‘நமக்காக அப்பாவை ஒரு மணி நேரம் நிற்க வைத்துவிட்டோமே’ என்று மிகவும் வருத்தப்பட்டேன். இன்று அதே பள்ளிக்கு நான் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறேன். பெரிய ஹீரோ, பிரபலம் என்பது பெரிய விஷயம் இல்லை. இங்குள்ள ஒவ்வொரு ஆசிரியரும் பல விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளனர்.