×

தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி யூரியா உரத்துடன் இணை பொருட்கள் சேர்த்து விற்கப்படுவதாகவும், கூட்டுறவு நிறுவனங்களில் ‘நானோ’ கட்டாயப்படுத்தி விற்கப்படுவதாகவும், யூரியா தோட்டக்கலை பயிர்களுக்கு கலப்புரங்கள் கூடுதல் விலையில் விற்கப்படுவதாக தவறான தகவல்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒன்றிய அரசு ‘நானோ யூரியா’ பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதின் அடிப்படையில் இப்கோ கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் நானோ யூரியா விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நானோ யூரியா பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகளை தமிழக அரசு எப்போதும் நிர்பந்திக்கவோ கட்டாயப்படுத்தவோ இல்லை. எனவே அவர் அறிக்கையில் தெரிவித்தவாறு கூடுதல் விலைக்கு யூரியா மற்றும் உரங்கள் விற்பனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை காரணம் போதுமான அளவில் உரம் கையிருப்பில் உள்ளது….

The post தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Edapati ,Chennai ,Minister ,M. R.R. K.K. Bannerselvam ,Agriculture and Farmers Welfare Department ,Edupati ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி