×

ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை கடுமையாக எதிர்க்க வேண்டும் என காரைக்குடியில் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி நேற்று அளித்த பேட்டி: ஒரே நாடு ஒரே தேர்வு என்ற எண்ணமே தவறானது. ஒரே நாடுதான் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு நாட்டுக்குள் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரம் உள்ளது. மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடக்கூடாது. அதனை பறிக்கும் முயற்சியில் இறங்க கூடாது. நீட், கியூட் எல்லா தேர்வையும் இணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர்கல்வி அமைச்சர் எதற்கு? ஒன்றிய அரசே மத்திய பல்கலைக்கழகங்களை நிறுவுவது போன்று எல்லா கல்லூரிகளையும் நிறுவும் என்று அறிவிக்கலாமே. இதன் விளைவு ஒரே நாடு, ஒரே கல்வி என ஆரம்பித்து ஒரே கட்சி, ஒரே தலைவர் என்பதில் போய் நிற்கும். இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். 5ஜி ஏலத்தை பொறுத்தவரை 5 லட்சம் கோடிக்கு ஏலம் போக வேண்டியது, ரூ.1.5 லட்சம் கோடிக்குத்தான் போய் உள்ளது. இதில் யாருக்கு லாபம் என்பதை யோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். …

The post ஒன்றிய அரசின் ஒரே தேர்வு முறையை எதிர்க்க வேண்டும்: காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union government ,Karakudi P. Chidambaram ,Karaigudi ,Karaigudi, P. ,chidambaram ,Sivagangai District ,Karakukudi p. Chidambaram ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...