×

சென்னையில் களை கட்டுகிறது உணவுத் திருவிழா: இறுதிநாள் என்பதால் பொதுமக்கள் படையெடுப்பு

சென்னை: சென்னை தீவுத்திடலில் களைகட்ட கூடிய  உணவுத் திருவிழாவில் விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. முன்று நாட்கள் உணவுத் திருவிழாவின் இறுதி நாளான இன்றைய தினம் காலை முதல் பொதுமக்களுடைய வருகை என்பது மிக அதிக அளவில் இருப்பதை உணவுத் திருவிழாவில் அதிகமாக காணப்படுகின்றது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உணவுத் திருவிழாவில் உணவு பாதுகப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அரிய பாரம்பரிய உணவுகளை வெளிப்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த உணவுத் திருவிழாவானது சென்னை மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக முதல் இரண்டு நாட்களும் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாமன வரவேற்பை பொதுமக்களிடம் பெற்றிருப்பதையும் அதைநேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவுத் திருவிழாவில் வந்து கொண்டிருகின்றனர்.குறிப்பாக இங்கு வரக்கூடிய பொதுமக்கள் பராம்பரிய உணவு வகைகளை வாங்கி செல்வது மட்டுமின்றி அது தொடர்பான தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காலை முதல் பொதுமக்களை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் என்பதும் நடைபெற்று வர அந்த கலை நிகழ்ச்சிகளை இளைஞர், பெரியவர்கள் என வௌஅது வித்தியாசமின்றி அனைவரும் கண்டு ரசித்து கொண்டிருகின்றனர். நடைபெற்று வரக்கூடிய உணவித் திருவிழாவில் இன்று இறுதி நாள் என்பதால் இரவு 10 மணி வரை நடைபெறும் என்று ஒருங்கிணைப்பாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருக்கக்கூடிய காரணத்தால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடிதலாக செய்யப்பட்டிருக்கிறது. உணவுகளுடைய இருப்பும் அதிக அளவில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இங்கு இருக்கக்கூடிய பிரியாணி வகைகளில் பீப் பிரியாணி அதிக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைஞர்கள் தெரிவிக்கக்கூடிய கருத்தானது பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த உணவு வகைகள், நெல் வகைகள், தானிய வகைகள் மற்றும் இதன் மூலம் சமைக்க கூடிய உணவு பொருட்கள் இது குறித்த கருத்து பரிமாற்றங்கள் என்பது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இங்கு வரக்கூடிய பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.மேலும் இறுதி நாள் என்பதனால் விழிப்புணர்வு நடைப்பயணம் பேரணி என்பது நடைபெற்றிருந்தது. இதில் பங்கேற்ற ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் உணவு பாதுகாப்பு குறித்த பதாகைகளை ஏந்தியவாறு சுற்றி வந்து விழிப்புணர்வு மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. எனவே இறுதிநாளில் உணவித் திருவிழாவானது களை கட்டியிருக்கிறது….

The post சென்னையில் களை கட்டுகிறது உணவுத் திருவிழா: இறுதிநாள் என்பதால் பொதுமக்கள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Weed in Chennai Food Festival ,Chennai ,Weeding Food Festival in Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...