×

பாகிஸ்தான் சிறையில் சிக்கிய மீனவர்களின் கதை: நாக சைதன்யா

சென்னை: சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி, கருணாகரன் நடித்துள்ள ‘தண்டேல்’ என்ற படம், வரும் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். அல்லு அரவிந்த் வழங்க, கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரித்துள்ளார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலரை கார்த்தி வெளியிட்டார்.

அப்போது நாக சைதன்யா பேசுகையில், ‘தண்டேல் என்றால் லீடர் என்று அர்த்தம். இப்படத்துக்காக 20 பேரிடம் உரிமை வாங்கியுள்ளனர். 20 பேரும் பாகிஸ்தான் சிறையில் கைதியாக இருந்து விடுதலையான மீனவர்கள். அவர்களைப் பற்றிய படம் இது. கடந்த 2018ல் இச்சம்பவம் நடந்தது. ஸ்ரீகாகுளம் கிராமத்தில் இருந்து குஜராத்துக்கு ஒரு குழுவாகச் சென்று மீன் பிடிக்கும் நாங்கள், பாகிஸ்தான் எல்லையை தாண்டியதால் போலீசாரிடம் சிக்கிக்கொள்கிறோம். பிறகு எப்படி தப்பிக்கிறோம் என்பது படம். சாய்பல்லவி இதிலும் அசத்தியுள்ளார்’ என்றார்.

 

Tags : Naga Chaitanya ,Chennai ,Sandhu Mondetti ,Sai Pallavi ,Karunakaran ,Sham Dutt Zainuddin ,Devisree Prasad… ,
× RELATED புது காதலருடன் சமந்தா திருப்பதியில் சாமி தரிசனம்