×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குறைந்த எண்ணிக்கையில் சிலை வைக்ககோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகளை அமைக்குமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சிலைகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்க கோரி திருப்பூரைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவரும் வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தியின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன், சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் காரணமாகிவிடுகிறது. சிலைகள் வைப்பதையும், நீர்நிலைகளில் கரைப்பதையும் முறைப்படுத்த எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளை அறிவுறுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது….

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குறைந்த எண்ணிக்கையில் சிலை வைக்ககோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vinayagar Chadurthi ,Chennai ,Vineyagar ,Chaturthi ,Tamil Nadu ,Prakkar Chadurthi ,Court ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!