×

தீவுத்திடலில் களைகட்டியது உணவு திருவிழா

சென்னை: சென்னை தீவு திடலில் ‘‘சிங்கார சென்னை உணவு திருவிழா 2022’’ நேற்று முதல் தொடங்கி வரும் 14 ம் தேதி வரை பாரம்பரிய உணவு வகைகளுடன்  நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு துறை, ஈட் ரைட் இந்தியா இயக்கத்துடன் இணைந்து இவ்விழா நடத்தப்படுகிறது. அதன்  துவக்க விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ,உணவு பாதுகாப்பு துறை இயக்குனர், செயலாளர் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 150 அரங்குகள் மூலம் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன, உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை, சிறுதானிய உணவுகள் உட்கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வு இந்த உணவு கண்காட்சியின் மூலம் ஏற்படுத்தப்படும். உணவு தர நிர்ணயத்தில் முதல் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் நிகழ்ச்சிகளில் வீணாகும் உணவை அரசு பெற்றுக்  கொண்டு பசியால் வாடும் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்பட அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.* ‘பீப் பிரியாணி சாப்பிடுவேன்’அமைச்சர் சுப்பிரமணி கூறுகையில்,“இந்த உணவு கண்காட்சியில் மட்டன்  பிரியாணி சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளுக்கு தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீப் பிரியாணிக்கு ஏன் அரங்கு அமைக்கப்படவில்லை என்று கேட்கிறார்கள். நான் கூட பீப் பிரியாணி சாப்பிடுவேன், உணவு என்பது தனி மனித உரிமை பீப் பிரியாணி அரங்கம் அமைக்க கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அனுமதி வழங்கி இருப்போம்” என்றார்….

The post தீவுத்திடலில் களைகட்டியது உணவு திருவிழா appeared first on Dinakaran.

Tags : Firefighter weaned ,Chennai ,Sinkara Chennai Food Festival 2022 ,Chennai Island Tiddha ,Firefighter Food Festival ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...