×

உலகின் மற்ற பகுதிகளை விட 4 மடங்கு வேகமாக சூடேறும் ஆர்க்டிக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரிஸ்டோல்:  இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தை சேர்ந்த புவியல்  பேராசிரியர் ஜோனாத்தன்  பேம்பர் என்பவர் ஆர்க்டிக் பகுதி குறித்து ஆராய்ச்சி  நடத்தி உள்ளார். இந்த புதிய ஆய்வில் கடந்த 43 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்க்டிக் பகுதி, 4 மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது. கடந்த 1980ம் ஆண்டு இருந்ததை விட, ஆர்க்டிக்கில்  சராசரியாக 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகி இருக்கிறது. ஆர்க்டிக் கடல் பனி அடுக்குகள் உலகின் வெப்பநிலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த பனி அடுக்குகள் 85 சதவீத சூரிய ஒளியை எதிரொலிக்கின்றன. இதனால், சூரிய ஒளி புவியை வெப்பமாக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது. இதன்மூலம், பூமி வெப்பமயமாவது தடுக்கப்படுகிறது. ஆனால், கடல் பனி அடுக்குகள் உருகும்போது, சூரிய ஒளி நேரடியாக விழுவதால் நிலப்பரப்புள், கடல்களை அதிகம் வெப்பமடையச் செய்கின்றன….

The post உலகின் மற்ற பகுதிகளை விட 4 மடங்கு வேகமாக சூடேறும் ஆர்க்டிக்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Arctic ,Bristol ,Jonathan Bamber ,University of Bristol ,England ,Arctic Region ,post Arctic ,Dinakaran ,
× RELATED புடினை கடுமையாக விமர்சித்து வந்தவர்...