சென்னை: ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்திலிருந்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் விலகியுள்ளார். கவின், அபர்ணா தாஸ் நடித்த ‘டாடா’ படத்தை இயக்கியவர் பாபு கணேஷ். இவர் அடுத்ததாக இயக்கும் ‘கராத்தே பாபு’ படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் திடீரென படத்திலிருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தை அவர் கூறவில்லை. இதையடுத்து இப்படத்துக்கு இசையமைக்க சாம் சி.எஸ். ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கு முன் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பிரதர்’ படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைத்து இருந்தார். இதற்கிடையே ‘கராத்தே பாபு’ படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதில் அரசியல்வாதி தோற்றத்தில் சட்டசபையில் ஜெயம் ரவி பேசுவதுபோல் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் கராத்தே பாபு என்கிற பெயர் ஆர்.கே.நகர் மக்கள் 17 வருடங்களுக்கு முன் எனக்கு கொடுத்தது என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.