×

முக கவசம் அரசாணை; வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: தமிழகத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முகக்கவசம் அணிய அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி 12ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி, உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு ரூ.10000 அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்….

The post முக கவசம் அரசாணை; வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Health Department ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...