×

வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றை சித்தரிக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்: அரசு அறிவிப்பு

சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை வரும் 13ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: வடஇந்திய ஜான்சி ராணிக்கு 75 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் வீரப் பெண்மணி வேலுநாச்சியார். சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 1896ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இயற்கை எய்தினார். வீரத்திருமகளைப் போற்றுகின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிவகங்கை சூரக்குளத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. வீரமங்கை வேலுநாச்சியார் என்ற ‘‘வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நாட்டிய நாடகத்தை’’ கலைப்பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் இசையார்ந்த நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. முதல்வர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்.  இதனைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை நடத்த கேட்டு கொள்ளப்படுகிறது. …

The post வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்றை சித்தரிக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை முதல்வர் துவக்கி வைக்கிறார்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Veeramangai Velunachi ,G.K. Stalin ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...