×

டெல்லி கொடுத்த தைரியத்தால் சின்ன மம்மியை ஓரங்கட்டும் தேனிக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தேனி விவிஐபியின் சொந்த செல்வாக்கு அவரின் மாவட்டம் மட்டுமல்லாமல் தொகுதியிலும் தேய்ந்து வருகிறதாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி இரண்டாகி சேலம், தேனி என பிரிந்து விட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலோனோர் சேலத்து பக்கம் தாவி இடைக்கால பொதுச்செயலாளராக சேலத்தை தேர்வு செய்து விட்டனர். இதைத்தொடர்ந்து சேலத்துக்காரர் சுற்றுப்பயணம் தொடங்கி விட்டார். இவர் செல்லுமிடமெல்லாம் இலைக்கட்சி தொண்டர்கள் திரண்டு வரத்தொடங்கியுள்ளனர். அதேசமயம், தேனிக்காரர் அவர் சொந்த ஊரான பிக்பாண்டில் கடந்த ஒரு வார காலம் தங்கியிருந்தபோது அவரால் புதிதாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் தேனிக்காரரின் வீட்டிற்கு வந்து பார்த்து சென்றனர். அதேசமயம் அவரது சொந்த ஊர்க்காரர்களோ, சொந்த மாவட்டத்துக்காரர்களோ பெரிய அளவில் அவரை சந்திக்கவில்லை. இதில் தேனிக்காரரின் சொந்த ஊரான பிக்பாண்ட் நகரில் இருந்து இதுவரை சேலத்துக்காரர் பக்கம் எந்த இலைக்கட்சி நிர்வாகியும் செல்லவில்லை என ஆறுதலாக தேனிக்காரர் இருந்து வந்தார். ஆனால், சேலத்துக்காரருக்கு பிக்பாண்ட் நகரை தவிர ஹனிபீ மாவட்டத்தில் பரவலாக ஆதரவு உள்ளது. இதில் ஹனீபி மாவட்டத்தின் இலைக்கட்சி மாவட்ட செயலாளரை சேலத்துக்காரர் தரப்பு நீக்கியுள்ள நிலையில், புதிய மாவட்ட செயலாளர் நியமனத்திற்காக சேலத்துக்காரர் தரப்பு காத்துக்கொண்டிருக்கிறது. சேலத்துக்காரர் தரப்பில் மாவட்ட செயலாளர் நியமித்ததும், தேனிக்காரர் சொந்த ஊரான பிக்பாண்ட் நகரில் பூனைக்கு மணி கட்டுவது யார் என இலைக்கட்சியினர் காத்திருக்காங்களாம். தனக்கு ஆதரவா யாரை சேலத்துக்காரர் பிக்பாண்டில் நியமிக்கிறார் எனத் தெரிந்ததும், பிக்பாண்டில் பெரிய அளவில் தேனிக்காரரை விட்டு சேலத்துப்பக்கம் இலைக்கட்சி நிர்வாகிகள் தாவ தயாராகி இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மீண்டும் வலையில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டாம் என்று டெல்லியில் இருந்து யாருக்கு யார் சிக்னல் கொடுத்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரரும்,  சின்ன மம்மியும் இணைவதாக தகவல்கள் வெளியானபடி இருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் குக்கர் தலைமையும் சேலத்தை தவிர எங்கள் எல்லைக்குள் தேனியை சேர்க்க எந்த தடையும் இல்லை என்று சொல்லி இருந்தார். அதை மனதில் வைத்து இரண்டு கட்சி தொண்டர்களில் குறிப்பிட்ட தரப்பினர் சந்தோஷப்பட்டனர். ஆனால், போயஸ்கார்டன் அம்மா இறந்த பிறகு தன் மீது நம்பிக்கை வைக்காமல் சேலத்தின் மீது நம்பிக்கை வைத்தது முதல் பிரச்னை. இரண்டாவதாக, சின்ன மம்மியுடன் இணைந்தால், அவரின் மொத்த மன்னார்குடி குடும்பத்திடம் மீண்டும் கைகட்டி, வாய் ெபாத்தி நிற்க வேண்டிய நிலை ஏற்படும். இது இரண்டும் தேவையா என்று யோசித்து கொள்ளுங்கள். நீங்கள் தைரியமாக நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் மனு மேல் மனு போடுங்கள்… மற்றதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். இனி எந்த தேர்தல் வந்தாலும், தாமரையும் தர்மயுத்தக்காரரும் தான் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட வேண்டிய சூழல் ஏற்பட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த சூழலில், சின்ன மம்மியை நீங்கள் சேர்த்து கொண்டால், நீங்கள் அவரின் ஆதரவாளர் என்று தான் சொல்வார்களே தவிர, உங்களின் ஆதரவாளர் சின்ன மம்மி என்று யாரும் சொல்ல மாட்டாங்க என்று டெல்லி எச்சரித்துள்ளதாம். இதையே தேனியின் அடிபொடிகளும் சொல்றாங்களாம். மறைந்த இலை கட்சியின் முதல் எம்பி  வீட்டிற்கு தேனிக்காரரும், சின்னமம்மியும் ஒரே நாளில் அடுத்தடுத்து  சென்றார்களாம். முன்னதாக, விமானத்தில் வந்த சின்ன மம்மி சங்கம் வளர்த்த  நகரில் வந்தறங்கி அங்கிருந்து சாலை மார்க்கமாக மறைந்த எம்பி வீட்டிற்கு  சென்றாராம். ஆனால், தேனிக்காரர் சின்ன மம்மியுடன் சேர்ந்து பயணிக்காமல் மலைக்கோட்டை வந்து இறங்கி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மறைந்த எம்பி  வீட்டிற்கு அவரது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். சின்னமம்மி, தேனிக்காரர்  இருவரும் ஒரே விமானத்தில் வந்திறங்கினால், இணைப்பு உறுதி செய்யப்பட்டு விடும் என தேனிக்காரர் நினைத்து, சின்ன மம்மியை டெல்லி உத்தரவுபடி புறக்கணித்தாக அவர்களது  ஆதரவாளர்கள் பேசிக்கொள்கின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘எங்களுக்கே பில் போடுறீங்களே, டோல்கேட்டில் மல்லுக்கட்டிய இலை நிர்வாகிகள் மண்ணை கவ்விய கதையை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைகட்சியோட இடைக்கால தலைவரு முதல் முறையாக, 2 நாளைக்கு முன்னாடி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்தாரு. மாஜி மினிஸ்டர், தடபுடலாக வரவேற்பும் கொடுத்தாரு. இதுக்காக அக்கம் பக்கத்தில் இருந்து நிறைய ஜனங்களை லாரி, வேன், காருன்னு எல்லா வண்டிகளையும் வெச்சி, ஏத்திகிட்டு வந்தாங்க. அப்படி தடபுடலாக வந்த வண்டிகளை, வாணியம்பாடி டோல்கேட்ல, வேற வழியில்லாம ப்ரீயாவே விட்டாங்களாம். இதுல, கர்நாடகா ரிஜிஸ்ட்ரேஷன் இருக்குற ஒரு காருக்கு மட்டும் பில்லு போட்டிருக்காங்க. இத பார்த்து கொதிச்சுப்போன இலை கட்சியினர் , எங்களுக்கே பில்லு போடுவீங்களான்னு கேட்டு, வண்டிய ரோட்டிலேயே நிறுத்தி டோல்கேட் அதிகாரிங்க கிட்ட மல்லு கட்டியிருக்காங்க. கடுப்பான டோல்கேட் அதிகாரிங்க இது தொடர்பாக கம்ப்ளய்ண்ட் கொடுக்க போறதா சொல்லி சண்டை போட்டிருக்காங்க. இந்த சண்டைய வீடியோ எடுத்த அங்கிருந்த சிலர் இத சமூக வலைதளத்திலும் பரப்பி இருக்காங்க. இதுல, வாணியம்பாடி ஏரியா டோல்கேட் அதிகாரிங்க கம்ப்ளைண்டு கொடுக்கப்போறதாக பேசினாங்களாம். இதை தெரிஞ்ச, வாணியம்பாடி தொகுதி மெம்பர் சம்மந்தப்பட்ட டோல் அதிகாரிங்க கிட்ட, கம்ப்ளைண்டு எதுவும் கொடுக்க வேண்டாம்னு கெஞ்சினாங்களாம். இதனால, அதிகாரிங்க போலீஸ் கம்ப்ளைண்டு எதுவும் கொடுக்கலையாம். இவங்க செய்றதுக்கு நாம போய் நிக்க வேண்டியிருக்குதேன்னு புலம்பிட்டாராம் அந்த தொகுதி மெம்பர்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post டெல்லி கொடுத்த தைரியத்தால் சின்ன மம்மியை ஓரங்கட்டும் தேனிக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Delhi ,yananda ,VVIP ,Peter Uncle ,wiki Yananda ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...