×

ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள்

ஜால்னா: ஸ்டீல் மற்றும் ஜவுளி அதிபர் வீடு, அலுவலகங்களில் நடந்த ஐடி ரெய்டில் கணக்கில் காட்டப்படாத ரூ.56 கோடி, ரூ.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரை தொடர்ந்து, அவுரங்காபாத் 9+-ஜால்னாவில் உள்ள ஸ்டீல் மற்றும் ஜவுளி அதிபர் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதி அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், கணக்கில் வராத ரூ.56 கோடி, 14 கோடி மதிப்புள்ளான 32 கிலோ தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட கட்டுக்கட்டான பணத்தை எண்ண மட்டும் அதிகாரிகளுக்கு 13 மணி நேரம் ஆனது. இதுகுறித்து, வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘‘ரெய்டில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.390 கோடி என நம்பப்படுகிறது. இந்த ரெய்டில் பிடிபட்ட பணத்தை எண்ணும் பணியில் 260 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதிகாரிகள் 5 குழுக்களாக பிரிந்து இயந்திரம் உதவியடன் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்’’ என தெரிவித்தனர்….

The post ஸ்டீல், ஜவுளி அதிபர் வீடுகளில் சோதனை ரூ.56 கோடி, 32 கிலோ தங்கம் ரூ.390 கோடி சொத்து பறிமுதல்: 13 மணி நேரம் பணத்தை எண்ணிய அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Steel ,Textile ,Jalna ,President ,Steel and Textiles ,Dinakaran ,
× RELATED ஏற்றுமதி இலக்கை அடைந்திட ஒருங்கிணைந்த சிறிய ஜவுளி பூங்கா