×

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இந்தியாவின் 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகளை நினைவு கூரும் வகையில்   நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேராசிரியரும் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளருமான பெ.சாந்தி கலந்து கொண்டு சுதந்திரத்தின் மூலம் நாம் அடைந்த பலன்கள் குறித்தும்,வேளாண்மை வளர்ச்சி குறித்தும்,கொரோனா கால கட்டத்தில் அரும்பணியாற்றிய மருத்துவர்கள்,தூய்மை பணியாளர்கள்,  ஆசிரியர்களின் செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 25 மாணவ மாணவிகள்,விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்….

The post சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தியாகிகளை நினைவுகூரும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvur Agricultural Science Center ,Independence Day ,Tiruvallur ,India ,75th Independence Day Amuda Festival ,Agricultural Science Institute ,Thiruvallur ,
× RELATED சிறந்த சேவை புரிந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது