×

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டி: மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டிகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 பயணிகளுக்கு ரூ.4.56 கோடி மானியம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.8.2022) தலைமைச் செயலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்  உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் 10,583 உலமாக்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விதமாக 3 உலமாக்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்ட 1649 ஹஜ்  பயணிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் ஹஜ் மானியத் தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.27,628 வீதம், மொத்தம் 4.56 கோடி ரூபாய் வழங்கும் விதமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 5 ஹஜ் பயணிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப.,  கூடுதல் தலைமைச் செயலாளர்  தமிழ்நாடு மாநில ஹஜ் குழு செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகமது நசிமுத்தின், இ.ஆ.ப., பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர். மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப.,  சிறுபான்மையினர் நல இயக்குநர் முனைவர் சீ.சுரேஷ் குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 10,583 நபர்களுக்கு ரூ.5.43 கோடி செலவில் மிதிவண்டி: மு.க.ஸ்டாலின் வழங்கினார். appeared first on Dinakaran.

Tags : Ulemas and Workers Welfare Board ,M.K.Stalin ,Chennai ,Ulamas and Workers Welfare Board ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...