×

காவல் தெய்வ தரிசனம்

*கோயமுத்தூர் கருத்தம்பட்டியில் வாழைத்தோட்டத்து ஐயன் அருளாட்சி புரிகிறார். இங்கு புற்றுமண்ணே பிரசாதம். இந்த மண் விஷங்களை முறிக்கும் அருமருந்தாக நம்பப்படுகிறது.

*ஈரோடு, புதுப்பாளையத்தில் காமாட்சி அம்மை சமேத குருநாதசுவாமியை தரிசிக்கலாம். ஆலய நடுவில் உள்ள புற்று போன்ற குலுக்கை எனும் பூஜைப்பொருட்கள் உள்ள பெட்டகத்தை பூக்களால் பக்தர்கள் அர்ச்சிக்கிறார்கள். இதனால் தங்கள் தோட்டங்களில் பாம்பு, தேள், பூரான் போன்ற விஷஜந்து பாதிப்பு ஏற்படுவதில்லை.

*கடலூர் மாவட்டம் மெய்யாத்தூரில் சொக்காயி சமேத திருவரசமூர்த்தி அருள்கிறார். இப்பகுதி மக்கள் புதிதாக வாங்கிய வாகனங்களையும், விதை நெல்லையும் இங்கு எடுத்து வந்து பூஜித்த பின்பே பயன்படுத்துகின்றனர்.

*ஈரோடு, காஞ்சிக்கோயிலில் சீதேவி அம்மனை தரிசிக்கலாம். ஆனிமாதம் 60 அடி நீளம் கொண்ட குண்டத்தில் வெண்ணிற ஆடை அணிந்து பக்தர்கள் பூக்குழி இறங்குகின்றனர். கால்நடைகளைக் காக்க வெள்ளைகுதிரை ஒன்றும் அக்னி குண்டத்தில் இறங்குகிறது!

Tags :
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி