×

2000 வகை பரோட்டா…ஹாக்கி ப்ளேயர் டூ செஃப் …அசைவத்தில் அசத்தும் செஃப் சுந்தர்

கொரட்டூர் டிஎன்எச்பி காலனியில் இறங்கி ‘நல்ல அசைவ சாப்பாடு எங்கே சாப்பிடலாம்..’ என்றால். பெரும்பாலான ஏரியா மக்கள் கை காட்டுவது பாப்பாஸ் கிச்சனை நோக்கித் தான். அத்தனை அசைவத்தையும் வித்தியாசமான சுவையில் அள்ளித் தருகிறது என்கிறார் பாப்பாஸ் கிச்சனை நடத்தும் செஃப் சுந்தர். உள்ளே நுழையும்போதே  “ப்யூர் வெஜிட்டேரின் ப்ளீஸ் அவாய்ட்மீ” என்ற வாசகம் காணப்படுகிறது. வழக்கமான உணவகங்களைப் போல் அல்லாமல் ஸ்பெஷல் ரெசுபிகள் கிடைக்கின்றன சிக்கன் முர்த்தபாக் , மட்டன் முர்த்தபாக், சீஸ் முர்த்தபாக், பிஷ்,  4 இன் 1 எக் லேயர்  போன்ற பரோட்டா வகைகள் இங்கே மிகவும் பிரபலம்.  ப்ரூட்ஸ், சாக்லேட் தொடங்கி  சிக்கன், மட்டன் என 120 வகையான  பரோட்டாக்கள்  பரிமாறப்படுகிறது. இதனுடன் ஹாட் அன்ட் ஸ்பைஸியான ஸ்மோக்கி பிஷ் மற்றும் சீரகச் சம்பா பிரியாணி மிகவும் பிரபலம். தினமும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை பரபரப்பாக இயங்கும் இந்த உணவகத்தின் உரிமையாளர் செஃப் சுந்தர், கிளப் மகேந்திராவில்  செஃப்பாக இருந்து, தற்போது  சொந்தமாக உணவகம் தொடங்கியிருக்கிறார். “பூர்வீகம் ராஜபாளையம்.  23 வருஷமா சமையல் துறையில் இருக்கிறேன்.  அடிப்படையில் நான் ஒரு ஹாக்கி பிளேயர் கூடாவே கோச்சிங் மாஸ்டர். என்னுடைய 23 ஆவது வயசுல சிங்கப்பூரில் நடந்த ஹாக்கி போட்டிக்காக ஹாக்கி டீம் கோச்சாக சென்றிருந்தேன். அங்கே சாப்பிடுவதற்காக உணவகங்களுக்கு சென்றபோது, உணவின் மீது என் கவனம் திரும்பியது.  நெருப்போடு விளையாடியவாறு ஹாட் அண்ட் ஸ்பைசியாக சமைப்பதை பார்த்து ஆர்வம் ஏற்பட்டது. ஹாக்கி கோச் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சிங்கப்பூரிலேயே ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தேன். ஆர்வத்துடன் படித்ததால், இரண்டு ஆண்டுகளில் டிவி ஷோ, புட் பெஸ்ட்டிவல்ஸ் என பலபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றேன். ஆசிய அளவில் மிக முக்கிய செஃப்பாக மாறினேன். 2013-ல் உலகளவில் நடந்த உணவுப் போட்டியில் கலந்து கொண்டு பரோட்டா சாம்பியன் பட்டத்தை வென்றேன். அதுபோன்று சுமார் 2000 வகையான பரோட்டோ ரெசிபிகளை ரிசர்ச் செய்து வைத்திருக்கிறேன். 2014 வரை சிங்கப்பூரில் எக்ஸிக்யூட்டிவ் செஃப்பாக  இருந்து விட்டு சொந்த ஊரில் இயங்க வேண்டும் என்ற ஆசையில்  சென்னை வந்து இந்த உணவகத்தை துவங்கி நடத்தி வருகின்றேன். இங்கே வந்ததும் செஃப் தாமுவுடன் இணைந்து “கிராமத்து விருந்து” என்ற கான்செப்ட்டில் உணவுத்திருவிழாவை செய்தோம். அதன்பிறகு, கிளப் மகேந்திராவிலிருந்து செஃப் செளந்தரராஜன் அழைப்பு விடுக்க,  செஃப்பாக சேர்ந்தேன். பல்வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சமையல் போட்டிகளுக்கு சமைப்பதற்காக அனுப்பப்பட்டேன். கிளப் மகேந்திராவில் “க்ருவி பரோட்டா” செஃப் மாஸ்டர் என்றால்  நல்ல பிரபலம்.  பிறகு சொந்தமாக  தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்  இந்த பாப்பாஸ் கிச்சனை  தொடங்கினேன். ‘இது சைவப் பிரியர்கள் அதிகம் வசிக்கும் ஏரியா இங்கே அசைவ உணவு சரியா ஓடாது’ .. என்று நண்பர்கள் கூறினார்கள். அதையே சவாலாக எடுத்துக் கொண்டு சுவையையும் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு தொடங்கினேன். ஆரம்பத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஆனால், போக போக உணவின் சுவை பரவி உணவருந்த வரும் கஸ்டமர்ஸ்  தற்போது காத்திருந்து  சாப்பிட்டு  செல்கிறார்கள். “மாமாஸ் குசைன்” என்ற இந்தியன் -முஸ்லிம் உணவு கான்சப்ட்டில் தான் இதை தொடங்கியிருக்கேன். மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, வெஸ்ட்டர்ன், நார்த் இந்தியன் என முழுமையான மல்டி குசைன் கான்சஃப்ட்டில் ஒவ்வொரு உணவையும்  நானே கவனம் எடுத்து  சமைக்கிறேன். அதுபோன்று  இங்கே பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு என்று தனித்தனி மெனு உள்ளது.நான் அடிப்படையில்  ஸ்போர்ட்ஸ் மேன் என்பதால், ஒருவர்  ஒரு வேளைக்கு எவ்வளவு  கலோரி  எடுத்துக் கொள்ள வேண்டுமோ அந்த அளவிலேயே உணவுகள் இருக்கும். உதாரணமாக, மற்ற உணவகங்களில் 2 பரோட்டோ எடுத்துக் கொண்டால் 700 கலோரி இருக்கும். ஆனால், இங்கே அதே 2 பரோட்டா எடுத்துக் கொண்டால் 130 கலோரிதான் இருக்கும். அதற்கான மூலப் பொருள்கள் மட்டுமே சரியாக சேர்க்கிறேன். இங்கே சேர்க்கப்படும் மசாலாக்கள் அனைத்தையும் இயற்கை பொருள்களைக் கொண்டுதான் தயாரிக்கிறேன். 100 சதவீதம் பரோட்டோ முழுமையாக வெந்தால் மட்டுமே பரிமாறக் கொடுப்பேன். அதற்கு சைட் டிஷ்ஷாக இந்தோனேஷியாவின் சிக்கன் கிரேவி வழங்கப்படும். அதுபோன்று, மில்கி சீஸ் பரோட்டா, பைனாப்பிள் பரோட்டா, பனானா ஜாகிரி சீஸ், சாக்லேட் பரோட்டா, டிஷுபரோட்டா, ஸ்ட்ராபெரி சீஸ் டிலைட்  போன்ற பரோட்டா  வகைகள் குழந்தைகளை கவர்ந்தவை.இதைத் தவிர இங்கே மிகவும் பிரபலமான உணவு “மாமோஸ்  ஸ்மோக்கி  பிஷ்”. மீனை டீப் ப்ரை செய்து எடுத்த பின் மாமா சம்பா என்ற 58 வகையான பொருள்கள் கலந்து தயாரித்த மசாலாவை தூவி கொடுப்போம். இதன் சுவை  இந்த ஏரியாவில் அத்தனை  பிரபலம்” என்கின்றார் சுந்தர்.தொகுப்பு:– ஸ்ரீதேவிபடங்கள்: கிருஷ்ணமூர்த்திஉலகம் முழுவதும் மைதா தான் பிரதான உணவு சீனா நூடுல்ஸ்சில் துவங்கி அமெரிக்க, லண்டன் என பிசா பர்கர் என் மைதா கொண்டு தான் உணவுகள் உள்ளன.  பரோட்டா என்றதும், மைதா உடலுக்கு கெடுதல் என்று  தவிர்த்துவிடுகிறார்கள். மைதாவுடன் சரியான அளவு புரதம் சேர்த்து சமைக்க வேண்டும். பரோட்டவுடன் சுண்டல், பட்டாணி என சைவ குருமா, சிக்கன் மட்டன் போட்ற அசைவ குழம்பை தொட்டு சாப்பிடும்போது சரிவிகித உணவாக உடலுக்குள் சேருகின்றது. ‘‘பரோட்டாவுக்கு மாவு பிசையும்போது, எண்ணெய்யோ, முட்டையோ, பாலோ எதுவும் சேர்க்காமல், வெறும் சீனி, உப்பு, தண்ணீர் மட்டும் சேர்த்து பக்குவமாக பிசைந்து நன்றாக முறையாக வேக வைத்தால் பரோட்டா உடலுக்கு எதுவும் செய்யாது. இதனால், நான் மைதா நல்லது என்று விவாதம் செய்யவில்லை. ஆனால்,  பேக்கரி அயிட்டங்களை விரும்புவோர் பரோட்டாவையும் விரும்பலாம். இதற்காகவே 20 ஆண்டுகளாக  பரோட்டா குறித்து நிறைய ஆய்வுகள் செய்து தரவுகள் வைத்துள்ளேன். விரைவில் இது குறித்து புத்தகமாக வெளியிடும் எண்ணமும் உள்ளது’’ என்கிறார் செஃப் சுந்தர்.பரோட்டா பக்குவம்தேவை மைதா – 1 கிலோசர்க்கரை – 150 கிராம்உப்பு –  50 கிராம்தண்ணீர் – 300 மி.கி. ( தேவைக்கேற்ப)செய்முறை:மைதா மாவினை சலித்துக்கொள்ளவும். சலித்த மைதாவை அகலமான பாத்திரத்தில் கொட்டி அதனுடன் உப்பு, சர்க்கரை சேர்த்து ஒருசேர கலந்துகொள்ளவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து, ஒருசேர மாவினைத் திரட்டிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிசைந்த மாவினை வைத்து, ஈரத்துணியால் மூடி மூன்று மணி நேரம் ஊறவிடவும். மூன்று மணி நேரம் கழித்து நொதித்தல் அடைந்த மாவினை மறுபடியும் பிசைந்து, எலுமிச்சை அளவு உள்ள உருண்டைகளாக எடுத்து கையால் தட்டி, அடித்து வீசி எடுத்து லாகவமாக சுற்றி  கையால் தேய்த்தால் பரோட்டா பதம் வந்துவிடும். பின்னர், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மிதமான தீயில், இருபுறமும் திருப்பி திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும். சுவையான பரோட்டா தயார்.  …

The post 2000 வகை பரோட்டா…ஹாக்கி ப்ளேயர் டூ செஃப் …அசைவத்தில் அசத்தும் செஃப் சுந்தர் appeared first on Dinakaran.

Tags : Sunderar ,DNSH ,Chef ,
× RELATED அரண்மனை 4ல் தமன்னா, ராசி கன்னா