×

ஏர்டெல் 5ஜி சேவை இம்மாதமே துவக்கம்: ஜியோவை முந்துகிறது

புதுடெல்லி: ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை இந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில், “ஏர்டெல் நிறுவனமானது இந்த மாதத்தில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும். 2024ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டின் அனைத்து நகரங்கள், கிராம பகுதிகளை 5ஜி மூலமாக இணைக்க முடியும் என்று நம்புகிறோம். சமீபத்தில் நடந்த ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைகளை பாரதி ஏர்டெல் நிறுவனம் வாங்கியுள்ளது. இது நமது வரலாற்றில் மிக சிறந்த படைப்பாக இருக்கும்,’’ என்றார். எனினும், 5ஜி சேவைக்கான கட்டணம் குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனவே, இது தொடர்பான கட்டண விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில், மிகவும் அதிகப்பட்சமான அலைக்கற்றையை ரிலையன்சின் ஜியோ எடுத்தது. இருப்பினும், அது தனது 5ஜி சேவையை தொடங்கும் முன்பாக சந்தையை பிடிப்பதற்காக ஏர்டெல் முந்துகிறது….

The post ஏர்டெல் 5ஜி சேவை இம்மாதமே துவக்கம்: ஜியோவை முந்துகிறது appeared first on Dinakaran.

Tags : Airtel ,Beats Jio ,New Delhi ,Airtel… ,Jio ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு...