×

பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி

சென்னை: சென்னை ஐஐடியின் பிரவர்தக் டெக்னாலஜிஸ், சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டருடன் இணைந்து தொழில்துறைக்கு தயார் நிலையில் உள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை அளிக்க  இருக்கிறது. 2020-21 மற்றும் 2021-22ம் ஆண்டுகளில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த பயிற்சியில் சேரலாம். விருப்பமுள்ள மாணவர்கள் https://sonyfs.pravartak.org.in/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து ஐஐடி இயக்குனர் காமகோடி கூறுகையில், ‘‘6 மாதங்கள் கொண்ட இந்த கோர்ஸில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறலாம். குறிப்பாக, இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த முயற்சி பயனளிக்கும். சோனி இண்டியா சாப்ட்வேர் சென்டர் இந்த கோர்ஸில் முன்னிலை வகிக்கும் 15 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பையும், பிரவர்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் மீதியுள்ள மாணவர்களுக்கு நேர்காணலுக்கும் ஏற்பாடு செய்து இதர கம்பெனிகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும். நேர்முக தேர்வை தொடர்ந்து ஓர் எழுத்து தேர்வும் நடைபெறும். அதில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு டிரெய்னிங் புரோகிராமின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். டிரெய்னிங் புரோகிராமை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்’’ என்றார்….

The post பொறியியல் முடித்த மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் 6 மாத தொழில்நுட்ப திறன் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : IIT Chennai ,CHENNAI ,Pravardhak Technologies ,Sony India Software Center ,Dinakaran ,
× RELATED பர்மிங்காம் பல்கலைக் கழகத்துடன்...