இயேசு கிறிஸ்து மரித்த நாளே புனித வெள்ளி!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று அழைக்கப்படக்கூடிய இந்த நல்ல நாள் வருடம் வருடம் வெவ்வேறு வெள்ளிக்கிழமைகளில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வருகிறது.கிறிஸ்து இயேசு பாவிகளுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு காயப்பட்ட இந்த நாளை நினைவு கூறுவதற்காக வருடம்தோறும் கொண்டாடப்படுகிற ஒரு விழா தான் புனித வெள்ளி.

இயேசுகிறிஸ்து கிபி 33 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை சிலுவையில் அறைந்த தாக கூறப்படுகிறது. 30 வெள்ளிக்காசுக்காக அவருடைய சீசர் யூதாஸ்காரியோத்து என்பவரே  காட்டிக்கொடுத்தது இயேசுவுக்கு தெரிந்திருந்தாலும், அவரது தந்தை சொல்லியது நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த பாடுகள் அனைத்தையும் சகித்துக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட இயேசுவை காய்பா என்று தலைமை குரு விசாரித்து அவர் மீது வைக்கப்படும் முரண்பாடான குற்றங்களை  விசாரித்து, பின்பு இயேசு பிலாத்துவின் கையில் ஒப்புக் கொடுக்கப்பட்ட போது அவர் ஏசுவைக் குற்றமற்றவர் என்று கூறியும் மக்கள் மற்றும் சில தீயவர்கள் இல்லை என்று கூறி ஒரு குற்றவாளியை விடுவிக்குமாறு கூறினார்.

எனவே பிலாத்து இந்த குற்றச்செயலில் எனக்கு விருப்பமில்லை என்று கைகழுவி சென்றுவிட, இயேசுவை சிலுவையை தூக்கி வரச் சொல்லி அவருக்கு முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு பல அடிகள் கொடுக்கப்பட்டது. அப்பொழுது ஏசுவை தலைவனாக ஏற்றுக் கொண்ட மக்கள் பலரும் அழுதனர். அந்நிலையிலும், இயேசு எனக்காக யாரும் அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்று கூறி சிலுவையை சுமந்து சென்றார்.

கை கால் என மூன்று இடங்களில் ஆணி அடிக்கப்பட்டு, உடலெங்கும் ரத்தம் நிறைந்து உடலின் கடைசி துளி நீர் கூட வெளியே வரும் அளவிற்கு அடிபட்டு இயேசு இன்று மரித்தார். இந்த உயிர் நீத்த தினத்தை புனித வெள்ளியாகவும், மூன்றாம் நாள் இயேசு உயிர்த்தெழுந்து தனது சீடர்களுக்கு காட்சி அளித்து வின்னேறி சென்ற நாளை ஈஸ்டர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: