×

கோவையில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!

கோவை: கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் பரிந்துரை செய்துள்ளார். கோவை மாவட்டத்தில் செங்கல் சூளைகளால் நீர் வழிப்பாதைக்கும், வன விலங்குகளில் வலசை பாதைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு சில இடங்கள் சட்டவிரோதமாக செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி செங்கல் கொண்டு செல்லும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். சின்ன தடாகம், சோமயம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடையில் 177 செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள 177 செங்கல் சூளைகளுக்கு கடந்த ஆண்டு தீர்ப்பாயம் தடை விதித்தது. இந்நிலையில், செங்கல் சூளைகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்த மண் அளவினை கணக்கிட்டு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்….

The post கோவையில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : District ,National Green Thirubayam ,Govai ,National Green Forbayam ,Goai district ,Ruler ,National Green Thirbayam ,
× RELATED கோவை விபத்தில் உயிரிழந்த 2 பேர்...