×

சீரடியில் சாய்பாபா அருள்பாலித்த துவாரகமாயி மசூதியின் மகிமை

துவாரகமாயி மசூதி நமக்கு ஆத்ம ஞானத்தை தரும் அருமையான இடமாகும். அதனுள் காலடி எடுத்து வைத்ததுமே பலரது தோஷம் பறந்தோடி இருக்கிறது. சீரடியில் சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலித்த துவாரகமாயி மசூதி மிகவும் புனிதமான இடமாகும். அங்கு ஏராளமானவர்கள் பாபாவை நேரில் தரிசனம் செய்து ஆசி பெற்றுள்ளனர். அவர்கள் எல்லாம் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள். புண்ணியம் செய்தவர்கள். பஞ்சபூதங்களையும் கட்டுப்படுத்தி, உலக மக்களுக்கு கண்கண்ட தெய்வமாகத் திகழும் சாய்பாபா, தன்னை நாடி வந்தவர்களை இந்த இடத்துக்குள் நாடி பிடித்து பார்த்த சம்பவம் பல தடவை உள்ளது. துவாரகமாயிக்குள் வருபவர் யார்? அவர் எதற்காக வந்துள்ளார்? அவர் மனதில் என்ன நினைக்கிறார்? அவருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பன போன்ற அனைத்தையும் சாய்பாபா அறிந்திருந்தார்.

பக்தர்கள் பலர் பாபாவை ஏமாற்ற முயற்சி செய்தது உண்டு. ஆனால் பாபாவிடம், அவர்கள் முயற்சி தோற்றுப் போனது. தன்னிடம் வந்தவர் எதற்காக வந்துள்ளார் என்பன அனைத்தையும் பாபா புட்டு, புட்டு வைத்து விடுவார். இந்த அற்புதத்தை துவாரகமாயிக்குள் அவர் தினம், தினம் நடத்தி காட்டினார். சாய்பாபா பெரும்பாலான நேரம் அந்த மசூதியிலேயே இருந்ததால், அங்கு அவரது அருள் அலை நிரம்பி வழிந்தது. இப்போதும் அருள் அதிர்வுகள் உள்ளது. அந்த மசூதிக்குள் காலடி எடுத்து வைத்த ஒவ்வொருவரும் இதை அனுபவப்பூர்வமாக நன்கு உணர்ந்தனர்.

பாபாவை பார்க்க நாட்டின் நாலா திசையில் இருந்தும் வந்தவர்கள், துவாரகமாயிக்குள் நுழைந்ததும் தங்களையே மறந்தனர். நிறைய பேர் தாங்கள் யார், தங்களுக்கும் பாபாவுக்கும் உள்ள தொடர்பு எத்தகைய மகத்துவமானது என்ற தெளிவைப் பெற்றனர். சமீப காலமாக சீரடி தலத்துக்கு செல்பவர்கள், அவரது மகாசமாதி அமைந்துள்ள அரங்கில் மட்டுமே மனம் குளிர வழிபடுகிறார்கள். துவாரகமாயி உள்ளிட்ட மற்ற இடங்களை ஏதோ சுற்றுலா இடத்தைப் பார்ப்பது போல பார்க்கிறார்கள். அது தவறு. சீரடிக்கு வரும் போது நாம் மனதில் என்ன நினைத்துக் கொண்டு வந்தோமோ, அதை நாம் மனதில் நினைத்ததை துல்லியமாக சொல்கிறார் என்றால் அவர் கடவுளாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும் பாபாவை தவிர.

Tags : Sai Baba ,Arulpalitha Dwarakamayi ,
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!