×

3-வது நாளாக மசினகுடி – கூடலூர் இடையே போக்குவரத்து நிறுத்தம்.: 80 கி.மீ. வரை சுற்றி செல்வதால் மக்கள் அவதி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3-வது நாளாக மசினகுடி – கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உதகை- கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அங்கு உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிளன்மார்கன் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் ஓடும் மாயார் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிய நிலையில், தற்போது அங்கு மழையின் அளவு குறைந்துள்ளது. அணையில் இருந்து 2,760 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், 986 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளத்தின் அளவு குறைந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி மசினகுடி – கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மசினகுடி ,மாயார், வாழை தோட்டம், ஆனைக்காட்டி உள்ளிட்ட 15 கிராம மக்கள் கூடலூர் மற்றும் கர்நாடக மாநிலத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்போர் கல்லட்டி மலை பாதை நடுவட்டம் வழியாக 80 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.  ஆற்றில் தண்ணீர் குறைந்ததும், அதன் உறுதி தன்மையை பரிசோதித்த பின்பு தான் வாகனங்கள்  அனுமதிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் கூறியுள்ளனர்.  …

The post 3-வது நாளாக மசினகுடி – கூடலூர் இடையே போக்குவரத்து நிறுத்தம்.: 80 கி.மீ. வரை சுற்றி செல்வதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Masanakudi — ,Cuddalore ,Nilgiri ,Masanigudi — ,Cuddalore highway ,Nilgiri district ,Madam River ,Masingudi ,Avati ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை