×

விவசாய பயன்பாட்டிற்கு 1022 மெட்ரிக் டன் உரங்கள் பழநிக்கு ரயில் மூலம் வருகை

பழநி: பழநி பகுதியின் விவசாய பயன்பாட்டிற்கு 1022 மெட்ரிக் டன் உரங்கள் ரயில் மூலம் வந்தடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான ரசாயன உரங்கள் போதிய அளவில் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்க வேளாண்துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கு யூரியா 2 ஆயிரத்து 397 மெட்ரிக் டன்களும், டிஏபி 691 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 701 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 4 ஆயிரத்து 34 மெட்ரிக் டன்களும், சூப்பர் பாஸ்பேட் 714 மெட்ரிக் டன்களும் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.    இந்நிலையில் நேற்று தூத்தக்குடி ஸ்பிக் உர நிறுவனம் மூலம் யூரியா 758 மெட்ரிக் டன் மற்றும் 20:20:0:13 காம்ப்ளக்ஸ் 264 மெட்ரிக் டன்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் மூலம் பழநி வந்தடைந்தது. உரங்களை திண்டுக்கல் மாவட்ட வேளாண் உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) உமா, வட்டாரங்களில் உள்ள தனியார் உர விற்பனையாளர்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உரங்களை வாங்க செல்லும் விவசாயிகள் ஆதார் எண்ணை அவசியம் கொண்டு செல்ல வேண்டும். உர விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  உரங்களுக்கான விலை பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என வேளாண் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.   …

The post விவசாய பயன்பாட்டிற்கு 1022 மெட்ரிக் டன் உரங்கள் பழநிக்கு ரயில் மூலம் வருகை appeared first on Dinakaran.

Tags : Palani ,Dindigul ,Palanik ,Dinakaran ,
× RELATED மாவட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கை தேவை