×

குடும்பம், குடும்பமாக சுற்றுலா செல்ல தகுந்த இடம்…மனதை லயிக்க வைக்கும் பச்சைமலை

* பரவசத்தை தூண்டும் இயற்கை தந்த கல்லாறுபெரம்பலூர்: வேப்பந்தட்டை தாலுக்கா, அன்ன மங்கலம் ஊராட்சி விசுவக்குடி அருகே பச்சைமலையிலிருந்து உற்பத்தியாகும் காட்டாறு எனப்படும் கல்லாற்று நீரை சேமித்திட பச்சைமலை – செம்மலை மலைக்குன்றுகளை 685 மீட்டர் நீளத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு பயன்படுவதை காட்டிலும் பார்த்தால், பரவசத்தை தூண்டுவதால் சுற்றுலா பயணிகளை சுண்டியிழுத்து பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத்தல அந்தஸ்தை பெற்றுள்ளது. தனது பங்களிப்புக்காக சுற்று லாத்துறையும் ரூ.2கோடியை ஒதுக்கி குடிநீர், பார்க் கிங், நடைபாதை, அணையை முழுமையாகக் காண உயர் கோபுரம், மின் விள க்கு, கழிப்பறை வசதிகளை செய்து கொடுத்துள்ளது.இதனால் வார விடுமுறையென்றால் கூட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக படையெடுத்து சென்று, கொண்டுசென்ற உணவை பரிமாறி உண்டுகளித்து, நீந்தித்திளைத்து வருகின்றனர். ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவமழையின் போது அணைக்கட்டுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது மலையில் தண் ணீர் வரும் சிற்றோடை வழியாக சின்னஞ் சிறுகளோடு இளசுகளும் இணைந்து மலைக்குன்றின் மறுபக்கம் வரை சென்று மழை நீரில் மல்லாக்கக் கிடந்து விளை யாடியபிறகு வீடு திரும்புவ தே வழக்கமாக உள்ளது. விடுமுறைக் கொண்டாட்டத்திற்கு இப்போது விசுவக்குடி அணைக்கட்டுதான் விடலைகளின் புகழிடமாக உள்ளது. விவசாய தேவைகளுக்கும் நீர்வளஆதாரத்துறை பயன் படுத்தி வருகின்றனர்.ஆறு இல்லாத ஊர் பாழ் என்பார்கள். இங்கே ஓடோடி வரும் காட்டாறு தான் இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமும், வாழ்க்கையை ரசிக்க பயன்படுத்தும் சுற்றுலா தலமும் கூட. எப்படி பார்த்தாலும் அந்த பகுதி அழகின் ரகசியத்தை உள்ளடக்கியே உள்ளது மனதிற்கு இனம் புரியாத இன்பத்தை தந்தே செல்கிறது.பசுமை சேலையை போர்த்தி படுத்திருக்கும் லட்சிணங்கள் நிறைந்த பெண்ணாக திகழ்கிறது பச்சைமலை. பச்சைமலை தொடர்ச்சியில் தான் பால்வார்க்கும் அருவிகளும், ஆறுகளும் ஆங்காங்கே உற்பத்தியாகி ஆர்ப்பரித்து செல்லுகின்றன….

The post குடும்பம், குடும்பமாக சுற்றுலா செல்ல தகுந்த இடம்…மனதை லயிக்க வைக்கும் பச்சைமலை appeared first on Dinakaran.

Tags : Anna Mangalam ,Pachimalai ,Visuakudi ,Green Mountain ,
× RELATED துறையூர் அருகே பச்சைமலை பகுதி...